< Back
பிற விளையாட்டு
இந்திய பேட்மிண்டன் வீரர் சாய் பிரனீத் ஓய்வு

Image Courtesy: PTI

பிற விளையாட்டு

இந்திய பேட்மிண்டன் வீரர் சாய் பிரனீத் ஓய்வு

தினத்தந்தி
|
5 March 2024 5:06 AM IST

இந்திய முன்னணி பேட்மிண்டன் வீரர் சாய் பிரனீத் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.

புதுடெல்லி,

இந்திய முன்னணி பேட்மிண்டன் வீரர் ஐதராபாத்தை சேர்ந்த 31 வயதான சாய் பிரனீத் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றவரான சாய் பிரனீத், 2019-ம் ஆண்டில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்று சாதனை படைத்திருந்தார்.

தனது விளையாட்டு வாழ்க்கையில் புதிய இன்னிங்சை தொடங்க இருக்கும் சாய் பிரனீத், அமெரிக்காவில் உள்ள டிரையாங்கிள் பேட்மிண்டன் அகாடமியின் தலைமை பயிற்சியாளராக அடுத்த மாதத்தில் இணைய இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்