< Back
பிற விளையாட்டு
உலக மல்யுத்தம்: தகுதி சுற்றில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தோல்வி

கோப்புப்படம்

பிற விளையாட்டு

உலக மல்யுத்தம்: தகுதி சுற்றில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தோல்வி

தினத்தந்தி
|
14 Sept 2022 1:25 AM IST

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 53 கிலோ எடைப்பிரிவின் தகுதி சுற்றில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தோல்வி அடைந்தார்.

பெல்கிரேடு:

17-வது உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி செர்பியா தலைநகர் பெல்கிரேடில் கடந்த 10-ந் தேதி தொடங்கி 18-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 53 கிலோ எடைப்பிரிவில் அரியானாவை சேர்ந்த நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகத் இந்திய அணியில் இடம் பிடித்தார்.

இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 53 கிலோ உடல் எடைப்பிரிவின் தகுதி சுற்றில் காமன்வெல்த் போட்டியில் தொடர்ந்து 3 முறை தங்கப்பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை வினேஷ் போகத், மங்கோலியாவின் குலான் பட்குயாவை சந்தித்தார்.

இதில் தொடக்கம் முதலே சற்று தடுமாற்றத்தை சந்தித்த வினேஷ் போகத் 0-7 என்ற புள்ளி கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டார்.

இதேபோல் 50 கிலோ எடைப்பிரிவில் 2-வது சுற்றில் இந்திய வீராங்கனை நீலம் சிரோஹி 0-10 என்ற புள்ளி கணக்கில் உலக போட்டியில் 2 முறை வெள்ளிப்பதக்கம் வென்றுள்ள ருமேனியாவின் எமிலியா அலினா வுச்சிடம் வீழ்ந்தார். 65 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை ஷபாலி ஷர்மா 0-10 என்ற புள்ளி கணக்கில் பிரான்சின் கோம்பா லாரோகியிடம் பணிந்தார்.

மேலும் செய்திகள்