< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
ஆசிய ஜூனியர் கைப்பந்து: அரைஇறுதியில் இந்தியா
|21 Aug 2022 3:51 AM IST
14-வது ஆசிய ஜூனியர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி சீன தைபேயை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.
14-வது ஆசிய ஜூனியர் (18 வயதுக்கு உட்பட்டோர்) கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஈரான் தலைநகர் டெக்ரானில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, சீன தைபேயை சந்தித்தது. விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் இந்திய அணி 25-19, 25-14, 25-27, 25-23 என்ற செட் கணக்கில் சீன தைபேயை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது. இந்திய அணியில் துருவில் பட்டேல், சேகர் தருண், கபிலன், யாமன் காதிக் ஆகியோரின் ஆட்டம் அருமையாக இருந்தது. இந்திய அணி இன்று நடைபெறும் அரைஇறுதி ஆட்டத்தில் ஈரான் அல்லது தாய்லாந்தை எதிர்கொள்கிறது.
அரைஇறுதிக்குள் நுழைந்ததன் மூலம் இந்திய அணி அடுத்த ஆண்டு (2023) நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றது.