< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
இந்திய ஓபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் தோல்வி
|20 Jan 2023 4:38 AM IST
முன்னாள் சாம்பியனான இந்தியாவின் சாய்னா நேவால், ஒலிம்பிக் சாம்பியன் சீனாவின் சென் யு பேவுடன் மோதினார்.
புதுடெல்லி,
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான இந்தியாவின் சாய்னா நேவால், ஒலிம்பிக் சாம்பியன் சீனாவின் சென் யு பேவுடன் மோதினார்.
எதிராளியின் அதிரடியான ஷாட்டுகளை சமாளிக்க முடியாமல் திண்டாடிய சாய்னா 9-21, 12-21 என்ற நேர் செட்டில் பணிந்தார். வெறும் 32 நிமிடங்களில் இந்த ஆட்டம் முடிவுக்கு வந்தது.