< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
இந்தியா ஓபன் பேட்மிண்டன்; அரையிறுதிக்கு முன்னேறினார் எச்.எஸ்.பிரனாய்..!
|19 Jan 2024 9:31 PM IST
இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி,
இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய நட்சத்திர வீரர் எச்.எஸ்.பிரனாய் சீன தைபேவின் வாங் ட்ஸூ வெய் உடன் மோதினார்.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 21-11, 17-21, 21- 18 என்ற செட் கணக்கில் வாங் ட்ஸூ வெய்யை வீழ்த்தி பிரனாய் அரையிறுதிக்கு முன்னேறினார்.