< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
இந்திய ஓபன் பேட்மிண்டன்: சியாங், யமகுச்சி இறுதிபோட்டிக்கு முன்னேற்றம்
|21 Jan 2023 8:16 PM IST
நாளை நடைபெற உள்ள இறுதி போட்டியில் யமகுச்சி அன் சியாங்குடன் மோதுகிறார்.
புதுடெல்லி,
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டி ஒன்றில் ஜப்பான் வீராங்கனை அஹானே யமகுச்சி, தாய்லாந்து வீராங்கனை சுபநிடா கேட்டோங்குடன் மோதினார். இந்த போட்டியில் யமகுச்சி 21-17, 21-16 என்ற நேர் செட் கணக்கில் சுபநிடாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதி போட்டியில் தென் கொரியா வீராங்கனை அன் சியாங், சீன வீராங்கனை ஹீ பிங்ஜிவுடன் மோதினார். இந்த போட்டியில் சியாங், 11-21, 21-16, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.
நாளை நடைபெற உள்ள இறுதி போட்டியில் யமகுச்சி அன் சியாங்குடன் மோதுகிறார்.