< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
இந்தியா ஓபன் பேட்மிண்டன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சாத்விக் - சிராக் ஜோடி
|21 Jan 2024 1:32 AM IST
மலேசியாவின் ஆரோன் சியா-சோக் வூய் யிக் ஜோடியை தோற்கடித்து இந்திய ஜோடி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
புதுடெல்லி,
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் எச்.எஸ். பிரனாய் 15-21, 5-21 என்ற நேர் செட்டில் 2-ம் நிலை வீரரான சி யு கியிடம் (சீனா) வீழ்ந்தார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரைஇறுதியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை 21-18, 21-14 என்ற நேர்செட்டில் மலேசியாவின் ஆரோன் சியா-சோக் வூய் யிக் ஜோடியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.