< Back
பிற விளையாட்டு
மணிக்கட்டில் வலியுடன் தான் எடையை தூக்கினேன் - வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானு பேட்டி
பிற விளையாட்டு

'மணிக்கட்டில் வலியுடன் தான் எடையை தூக்கினேன்' - வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானு பேட்டி

தினத்தந்தி
|
8 Dec 2022 1:57 AM IST

உலக பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றார்.

போகோடா,

உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி கொலம்பியாவில் உள்ள போகோடாவில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 49 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு ஸ்னாட்ச் பிரிவில் 87 கிலோவும், 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் 113 கிலோவும் என்று மொத்தம் 200 கிலோ எடைதூக்கி வெள்ளிப்பதக்கம் வென்றார்.

சீன வீராங்கனை ஜியாங் ஹூய்ஹூவா மொத்தம் 206 கிலோ (ஸ்னாட்ச் 93 கிலோ, கிளீன் அண்ட் ஜெர்க் 113 கிலோ) தூக்கி தங்கப்பதக்கமும், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவரான சீனாவை சேர்ந்த ஜிஹூவா 198 கிலோ எடை தூக்கி (ஸ்னாட்ச் 89 கிலோ, கிளீன் அண்ட் ஜெர்க் 109 கிலோ) வெண்கலப்பதக்கமும் கைப்பற்றினர்.

டோக்கியா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான மணிப்பூரை சேர்ந்த மீராபாய் சானு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வெல்வது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 2017-ம் ஆண்டில் தங்கப்பதக்கம் வென்று இருந்தார்.

இந்நிலையில் பதக்கம் வென்றது குறித்து மீராபாய் சானு கூறுகையில், "5 ஆண்டுக்கு பிறகு உலக போட்டியில் மீண்டும் ஒரு பதக்கம் வென்று இருப்பது பெருமை அளிக்கிறது. மணிக்கட்டில் வலியுடன் தான் எடையை தூக்கினேன். அடுத்த ஆசிய கோப்பை மற்றும் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல முடியும் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்