< Back
பிற விளையாட்டு
36வது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் முன்னோட்ட நிகழ்ச்சி இன்று தொடக்கம்! மந்திரி அமித்ஷா தொடங்கி வைக்கிறார்
பிற விளையாட்டு

36வது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் முன்னோட்ட நிகழ்ச்சி இன்று தொடக்கம்! மந்திரி அமித்ஷா தொடங்கி வைக்கிறார்

தினத்தந்தி
|
4 Sept 2022 8:05 AM IST

ஆமதாபாத்தில் 36வது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் முன்னோட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

குஜராத்தின் ஆமதாபாதில் உள்ள இகேஏ அரீனா டிரான்ஸ் ஸ்டேடியாவில் 36வது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் முன்னோட்ட நிகழ்வு ஞாயிறு மாலை நடைபெற உள்ளது.

விளையாட்டின் மூலம் ஒற்றுமையைக் கொண்டாடுவோம் என்ற மையப்பொருளில், ஏழு ஆண்டு இடைவெளிக்குப் பின் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 12 வரை, 36வது தேசிய விளையாட்டுப் போட்டி நடைபெறவுள்ளது. கடைசியாக இந்த விளையாட்டுப் போட்டிகள் 2015ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்றன.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, குஜராத் முதல் மந்திரி பூபேந்திர படேல் மற்றும் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் துறை மந்திரி அனுராக் தாக்கூர் ஆகியோருடன் இந்த மாபெரும் நிகழ்வில் கலந்துகொள்கிறார்.

இந்த முன்னோட்ட நிகழ்வில், விளையாட்டுக்கள் கீதம் மற்றும் சின்னம் வெளியிடுதல், இணையதளம் மற்றும் செல்பேசி செயலி வெளியிடுதல் ஆகியவையும் இருக்கும். 9,000க்கும் அதிகமான சிறப்பு விருந்தினர்கள் இந்த வண்ணமிகு விழாவில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம். இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம், இதை எப்போதும் இல்லாத வகையில் சிறந்த விளையாட்டுகளாக மாற்ற எந்தவொரு முயற்சியையும் விட்டுவைக்கவில்லை" என்று பூபேந்திர படேல் கூறினார்.

பாரம்பரிய ஒலிம்பிக் விளையாட்டுகள் உட்பட 36 போட்டிகளில் 28 மாநிலங்கள் மற்றும் எட்டு யூனியன் பிரதேசங்களிலிருந்து 7,000 தடகள வீரர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மல்லகம்பம், யோகாசனம் போன்ற உள்நாட்டு விளையாட்டுகளும் முதல்முறையாக தேசிய விளையாட்டுப் போட்டிகளில் இடம்பெறும்.

மேலும் செய்திகள்