< Back
பிற விளையாட்டு
உலக செஸ் சாம்பியனாகி வரலாறு படைத்தார் சீனாவின் டிங் லீரன்
பிற விளையாட்டு

உலக செஸ் சாம்பியனாகி வரலாறு படைத்தார் சீனாவின் டிங் லீரன்

தினத்தந்தி
|
30 April 2023 9:18 PM IST

உலக செஸ் சாம்பியனான சீனாவைச் சேர்ந்த முதல் மனிதர் என்ற பெருமையை டிங் லிரன் படைத்துள்ளார்.

கஜகஸ்தான்,

கஜகஸ்தானில் நடைபெற்று வந்த உலக சாம்பியன்ஷிப் செஸ் தொடரில் பட்டம் வென்று சீன வீரர் டிங் லிரன் சாதனைப் படைத்துள்ளார்.

சீன வீரரான டிங் லீரன், ரஷியாவின் கிராண்ட் மாஸ்டர் இயான் நிப்போம்னிசியை வீழ்த்தி உலகின் புதிய செஸ் சாம்பியன் ஆனார்.

கடந்த 10 ஆண்டுகளாக உலக செஸ் சாம்பியனாக இருந்த மேக்னல் கார்ல்சன் உலக சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க விரும்பவில்லை என்று கூறியதால் இறுதி தொடரில் டிங் லீரன் - இயான் நிப்போம்னிசி மோதினர்.

14 சுற்றுக்கள் கொண்ட தொடரின் முடிவில் இருவரும் 7-7 புள்ளிகள் பெற்று சமனில் முடிந்ததால், டை பிரேக்கர் போட்டிகள் நடைபெற்றன. அதில் வெற்றி பெற்ற டிங் லீரன், உலக சாம்பியன் ஆன முதல் சீன வீரர் என்ற பெருமையை பெற்றார்.

மேலும் செய்திகள்