< Back
பிற விளையாட்டு
கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்திய வீரர் கார்த்திகேயா கால்இறுதிக்கு முன்னேற்றம்..!

கோப்புப்படம் 

பிற விளையாட்டு

கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்திய வீரர் கார்த்திகேயா கால்இறுதிக்கு முன்னேற்றம்..!

தினத்தந்தி
|
8 Dec 2023 3:10 AM IST

இந்திய வீராங்கனை உன்னாதி ஹூடா, சீன தைபேயின் சுங் ஷோ யூனிடம் தோல்வியடைந்தார்.

கவுகாத்தி,

கவுகாத்தி மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அசாமில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சமீர் வர்மா 22-24, 21-18, 21-23 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் ஆல்வி விஜயா சாய்ருல்லாவிடம் தோற்று வெளியேறினார்.

இன்னொரு ஆட்டத்தில் இந்திய வீரர் கார்த்திகேயா குல்ஷன் குமார் 21-18, 21-15 என்ற நேர் செட்டில் டென்மார்க்கின் கிறிஸ்டோபர்சென்னை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். இதேபோல் தேசிய சாம்பியன் மிதுன் மஞ்சுநாத் 19-21, 19-21 என்ற நேர்செட்டில் மலேசியாவின் ஜஸ்டின் ஹோக்விடம் 'சரண்' அடைந்தார்.

பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை உன்னாதி ஹூடா 21-11, 15-21, 19-21 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் சுங் ஷோ யூனிடம் தோல்வியடைந்தார்.

மேலும் செய்திகள்