< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: 2-வது சுற்றில் சமீர் வர்மா வெற்றி
|7 Dec 2023 12:58 AM IST
இந்திய வீராங்கனை ஆகார்ஷி காஷ்யப், டென்மார்க் வீராங்கனை அமெலியை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
கவுகாத்தி,
கவுகாத்தி மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அசாமில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சமீர் வர்மா 21-13, 21-13 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீரர் கிரண் ஜார்ஜை தோற்கடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் தேசிய சாம்பியனான மிதுன் மஞ்சுநாத் 21-14, 21-10 என்ற நேர்செட்டில் சக வீரர் ஹேமந்த் கவுடாவை தோற்கடித்தார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை ஆகார்ஷி காஷ்யப் 15-21, 21-17, 22-20 என்ற செட் கணக்கில் டென்மார்க் வீராங்கனை அமெலியை போராடி தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.