< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: தனிஷா-அஸ்வினி ஜோடி 'சாம்பியன்'
|11 Dec 2023 4:31 AM IST
நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-அஸ்வினி பொன்னப்பா ஜோடி, சீன தைபேயின் சங் சூவ் யுன்-யு சியான் ஹய் ஜோடியுடன் மோதியது.
கவுகாத்தி,
கவுகாத்தி மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அசாமில் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தது. இந்த தொடரில் பெண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-அஸ்வினி பொன்னப்பா ஜோடி, சீன தைபேயின் சங் சூவ் யுன்-யு சியான் ஹய் ஜோடியுடன் மோதியது.
40 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் தனிஷா-அஸ்வினி ஜோடி 21-13, 21-19 என்ற நேர் செட் கணக்கில் சங் சூவ் யுன்-யு சியான் ஹய் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. தனிஷா-அஸ்வினி ஜோடிக்கு ரூ.6½ லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் தாய்லாந்து வீராங்கனை லாலின்ரேட் சாய்வானும் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தோனேசியா வீரர் யோஹனஸ் சாட் மார்செலினோவும் சாம்பியன் பட்டம் வென்றனர்.