< Back
பிற விளையாட்டு
தோஹா டையமண்ட் லீக்கில் தங்கம்: நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து...!
பிற விளையாட்டு

தோஹா டையமண்ட் லீக்கில் தங்கம்: நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து...!

தினத்தந்தி
|
6 May 2023 7:51 AM GMT

தோஹா டையமண்ட் லீக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கத்தாரில் தோஹா டையமண்ட் லீக் விளையாட்டுப் போட்டிகள் முதல் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். 2022 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்ற சோப்ரா, இந்த முறையும் பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில் நீரஜ் சோப்ரா 88.67 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முதல் இடத்தைப் பிடித்து தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். இந்நிலையில், தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,

ஆண்டின் முதல் நிகழ்வு மற்றும் முதல் இடம். நீரஜ் சோப்ரா 88.67 மீட்டர் எறிந்து தோஹா டயமண்ட் லீக்கில் ஜொலித்தார். அவருக்கு வாழ்த்துகள்! அவரின் முன்னோக்கிய முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.



மேலும் செய்திகள்