< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
ஆல்இங்கிலாந்து பேட்மிண்டன்: திரிஷா-காயத்ரி ஜோடி அரைஇறுதியில் தோல்வி
|19 March 2023 3:45 AM IST
ஆல்இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது.
பர்மிங்காம்,
ஆல்இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடைபெற்ற அரைஇறுதி போட்டியில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, தென் கொரியாவின் லீ சோ ஹீ-பேக் ஹா னா ஜோடியுடன் மோதினர்.
இந்த போட்டியில் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி 10-21, 10-21 என்ற செட் ணக்கில் லீ-பேக் ஜோடியிடம் தோற்று வெளியேறியது.