< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு: வாள்வீச்சு போட்டியில் தமிழக அணிக்கு 4 பதக்கம்
|13 Feb 2023 5:31 AM IST
ஜபல்பூரில் நடந்த வாள்வீச்சு போட்டியில் தமிழக அணி 4 பதக்கங்களை வென்று அசத்தியது.
சென்னை,
கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டி மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் நடந்தது. இதில் வாள்வீச்சு போட்டியில் தமிழக அணி 4 பதக்கங்களை வென்று அசத்தியது. தனிநபர் பாயில் பிரிவில் தமிழக வீராங்கனை ஜெனிஷா வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.
பாயில் பிரிவின் ஆண்கள் போட்டியில் அரவிந்த் மாருஸ்வரன், கவின், பென்சிர்ஸ் ஆகியோர் அடங்கிய அணியும், இதன் பெண்கள் பிரிவில் பிரீத்தி, ஜெனிஷா, வர்ஷினி, ஜாய்ஸ் அஷிதா ஆகியோர் கொண்ட அணியும் வெள்ளிப்பதக்கத்தை வசப்படுத்தியது.
இதன் சாப்ரே பிரிவில் ரேன்டி, டாமின் ரிடோ, டாமின் ரிஷோ, சந்தோஷ் ஆகியோர் அடங்கிய தமிழக ஆண்கள் அணி வெண்கலத்தை பெற்றது.