< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: 'நம்பர் 1' ஜோடியை வீழ்த்தி சாத்விக்- சிராக் ஜோடி அரையிறுதிக்கு தகுதி
|28 Oct 2022 8:14 PM IST
அரையிறுதியில் இந்திய ஜோடி கொரியாவின் சோய் சோல் கியூ மற்றும் கிம் வோன் ஹோ ஜோடியை எதிர்கொள்கிறது.
பாரிஸ்,
பிரெஞ்சு ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் கடந்த 25 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி/சிராக் ஷெட்டி ஜோடி உலகின் நம்பர்.1 ஜோடியான டகுரோ ஹோக்கி- யுகோ கோபயாஷியை (ஜப்பான்) எதிர் கொண்டனர்.
நொடிக்கு நொடி பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்ற இந்த போட்டியில் சாத்விக்- சிராக் ஜோடி 23-21, 21-18 என்ற கணக்கில் வெற்றி பெற்று ஜப்பான் வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.
நாளை நடைபெறும் அரையிறுதி போட்டியில் இந்திய ஜோடி கொரியாவின் சோய் சோல் கியூ மற்றும் கிம் வோன் ஹோ ஜோடியை எதிர்கொள்கிறது.