< Back
பிற விளையாட்டு
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
பிற விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
25 Oct 2023 2:16 AM IST

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

ரென்னிஸ்,

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ரென்னிஸ் நகரில் நேற்று தொடங்கியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 12-21, 21-18, 21-15 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் கிரிகோரியா மரிஸ்கோ துன்ஜூங்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

இதேபோல் ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் உலக தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி 21-13, 21-13 என்ற நேர்செட்டில் பிரான்சின் லூகாஸ் கோர்வீ-ரோனன் லபார் இணையை தோற்கடித்து 2-வது சுற்றை எட்டியது.

மேலும் செய்திகள்