< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்; லக்சயா சென் காலிறுதிக்கு முன்னேற்றம்
|8 March 2024 12:42 PM IST
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.
பாரீஸ்,
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றான ரவுண்ட் ஆப் 16 சுற்றில் இந்திய நட்சத்திர வீரர் லக்சயா சென் சீனாவின் லி சைபெங் உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் முதல் சுற்றில் 16-21 என்ற புள்ளிக்கணக்கில் லி சைபெங்கிடம் தோல்வி கண்ட லக்சயா சென் அடுத்த இரு செட்களை 21-15, 21-13 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார்.
இறுதியில் 16-21, 21-15, 21-13 என்ற புள்ளிக்கணக்கில் லி சைபெங்கை வீழ்த்தி லக்சயா சென் காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் லக்சயா சென் சிங்கப்பூரின் லோஹ் கியன் யெவ் உடன் மோத உள்ளார்.