< Back
பிற விளையாட்டு
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: 2-வது சுற்றில் கிடாம்பி ஸ்ரீகாந்த் அதிர்ச்சி தோல்வி

Image Courtesy: PTI 

பிற விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: 2-வது சுற்றில் கிடாம்பி ஸ்ரீகாந்த் அதிர்ச்சி தோல்வி

தினத்தந்தி
|
27 Oct 2022 10:55 PM IST

கிடாம்பி ஸ்ரீகாந்த், டென்மார்க் வீரர் ராஸ்மஸ் கெம்கேவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார்.

பாரிஸ்,

பிரெஞ்சு ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த இரண்டாவது சுற்று போட்டியில் (ரவுண்டு ஆப் 16) இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், டென்மார்க் வீரர் ராஸ்மஸ் கெம்கேவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார்.

முதல் செட்டில் ஆதிக்கம் செலுத்திய ஸ்ரீகாந்த், அதன் பிறகு மிகவும் பரபரப்பாக நடைபெற்ற 2 செட்களிலும் தோல்வி அடைந்தார். இந்த போட்டியில் ராஸ்மஸ் கெம்கே 19-21, 21-12, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். இதன் மூலம் இந்த தொடரில் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்தின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

நேற்று நடந்த முதல் சுற்றில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-18, 21-18 என்ற செட் கணக்கில் சக இந்திய வீரர் லக்ஷ்யா சென்-னை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்