< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்; அரையிறுதியில் லக்சயா சென் தோல்வி
|10 March 2024 7:30 AM IST
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.
பாரீஸ்,
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய நட்சத்திர வீரர் லக்சயா சென் தாய்லாந்தின் குன்லவுட் விடிசார்ன் உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 22-20 என்ற புள்ளிக்கணக்கில் போராடி கைப்பற்றிய லக்சயா சென் அடுத்த இரு செட்களில் 13-21, 11-21 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்ந்தார்.
இறுதியில் 22-20, 13-21, 11-21 என்ற புள்ளிக்கணக்கில் லக்சயா சென்னை வீழ்த்தி தாய்லாந்தின் குன்லவுட் விடிசார்ன் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.