< Back
பிற விளையாட்டு
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் பி.வி.சிந்து தோல்வி

Image Courtesy: @BAI_Media / @badmintonphoto

பிற விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் பி.வி.சிந்து தோல்வி

தினத்தந்தி
|
9 March 2024 6:42 AM IST

ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி இணை அரையிறுதிக்கு முன்னேறியது.

பாரீஸ்,

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி. சிந்து 24-22, 17-21, 18-21 என்ற செட் கணக்கில் ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் சென் யூ பேவிடம் போராடி வீழ்ந்தார். இந்த ஆட்டம் 1 மணி 32 நிமிடங்கள் நீடித்தது.

ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதியில் உலக தரவரிசையில் முதலிடம் வகிக்கும் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி இணை 21-19, 21-13 என்ற நேர் செட்டில் தாய்லாந்தின் சுபாக் ஜோம்கோ- கிட்டின்போங் கெட்ரன் ஜோடியை விரட்டியடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.

மேலும் செய்திகள்