< Back
பிற விளையாட்டு
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: இரட்டையர் பிரிவில் அர்ஜுன்- துருவ் கபிலா ஜோடி தோல்வி

Image Courtesy: AFP

பிற விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: இரட்டையர் பிரிவில் அர்ஜுன்- துருவ் கபிலா ஜோடி தோல்வி

தினத்தந்தி
|
26 Oct 2022 11:24 PM IST

இந்த தோல்வியின் மூலம் அர்ஜுன்- துருவ் கபிலா ஜோடி பிரெஞ்சு ஓபன் தொடரிலிருந்து வெளியேறியுள்ளனர்.

பாரிஸ்,

பிரெஞ்சு ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நேற்று தொடங்கியது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த முதல் சுற்று போட்டியில் (ரவுண்டு ஆப் 32) இந்தியாவின் எம்.ஆர். அர்ஜுன்மற்றும் துருவ் கபிலா ஜோடி- இந்தோனேசியாவின் அல்ஃபியன்- ஆர்டியான்டோ ஜோடியை எதிர்கொண்டனர்.

இந்த போட்டியில் அல்ஃபியன்- ஆர்டியான்டோ ஜோடி 21-15, 21-16 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். இந்த தோல்வியின் மூலம் அர்ஜுன்மற்றும் துருவ் கபிலா ஜோடி பிரெஞ்சு ஓபன் தொடரிலிருந்து வெளியேறியுள்ளனர்.

அதே போல் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் முதல் சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய், சமீர் வர்மா, கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

மேலும் செய்திகள்