< Back
பிற விளையாட்டு
சென்னையில் பார்முலா4 கார் பந்தயம்: இந்தியாவில் முதல்முறையாக சாலையில் நடக்கிறது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
பிற விளையாட்டு

சென்னையில் பார்முலா4 கார் பந்தயம்: இந்தியாவில் முதல்முறையாக சாலையில் நடக்கிறது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

தினத்தந்தி
|
17 Aug 2023 1:44 AM IST

சென்னையில் பார்முலா4 வகை கார்பந்தயம் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது.

சென்னை,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.). ரேசிங் புரோமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (ஆர்.பி.பி.எல்.) இணைந்து சென்னையில் பார்முலா4 வகை கார்பந்தயத்தை டிசம்பர் மாதம் நடத்த உள்ளது. இந்த போட்டிக்கான அறிமுக கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி பேசியதாவது:-

"சென்னையில் பார்முலா ரேசிங் சர்க்யூட் எப்4 கார்பந்தயம் டிசம்பர் 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடைபெறுகிறது. இந்தியாவில் முதல்முறையாக சாலைகள் வழியாக நடத்தப்படுகின்றன மிகப்பெரிய மோட்டார் பந்தயம் இதுவாகும். எப்4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் ஆகியவை சென்னை தீவுத் திடல் மைதானத்தை சுற்றி 3.5 கிலோமீட்டர் சுற்றளவில் இரவு போட்டியாக நடத்தப்படுகிறது. இந்த சிறப்பு மிக்க இரண்டு சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். போட்டியை மிகச்சிறப்பாக நடத்துவதற்காக ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது."

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்