< Back
பிற விளையாட்டு
பார்முலா1 கார் பந்தயம்: முதல் சுற்றில் வெர்ஸ்டப்பென் வெற்றி

கோப்புப்படம்

பிற விளையாட்டு

பார்முலா1 கார் பந்தயம்: முதல் சுற்றில் வெர்ஸ்டப்பென் வெற்றி

தினத்தந்தி
|
3 March 2024 5:24 AM IST

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தய சாம்பியன்ஷிப் போட்டி 24 சுற்றுகளாக பல்வேறு நாடுகளில் நடத்தப்படுகிறது.

சகிர்,

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தய சாம்பியன்ஷிப் போட்டி 24 சுற்றுகளாக பல்வேறு நாடுகளில் நடத்தப்படுகிறது. இதன் முதல் சுற்றான அபுதாபி கிராண்ட் பிரி போட்டி அங்குள்ள சகிர் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. இதில் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் கலந்து கொண்டு காரில் சீறிப் பாய்ந்தனர்.

மொத்த பந்தய தூரமான 308.238 கிலோ மீட்டரை நடப்பு சாம்பியனான நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 1 மணி 31 நிமிடம் 44.74 வினாடியில் கடந்து முதலிடத்தை பிடித்து 26 புள்ளியை தட்டிச் சென்றார்.

வெர்ஸ்டப்பெனை விட 22.45 வினாடி பின்தங்கிய மெக்சிகோ வீரர் செர்ஜியா பெரேஸ் (ரெட்புல் அணி) 2-வது இடமும், 25.11 வினாடி பின்தங்கிய ஸ்பெயின் வீரர் கார்லோஸ் சைன்ஸ் (பெராரீ அணி) 3-வது இடமும் பிடித்தனர். 7 முறை சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்த போட்டி தொடரின் 2-வது சுற்றான சவுதி அரேபியன் கிராண்ட்பிரி போட்டி வருகிற 9-ந் தேதி நடக்கிறது.

மேலும் செய்திகள்