< Back
பிற விளையாட்டு
ஜப்பானில் நடைபெறும் பார்முலா-1 கார் பந்தயம் - தகுதி சுற்றில் பெல்ஜியம் வீரர் வெர்ஸ்டாப்பென் முதலிடம்
பிற விளையாட்டு

ஜப்பானில் நடைபெறும் பார்முலா-1 கார் பந்தயம் - தகுதி சுற்றில் பெல்ஜியம் வீரர் வெர்ஸ்டாப்பென் முதலிடம்

தினத்தந்தி
|
24 Sept 2023 1:54 AM IST

பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ரெட் புல் அணியின் ஓட்டுநர் வெர்ஸ்டாப்பென் முதலிடம் பிடித்து அசத்தினார்.

டோக்கியோ,

ஜப்பானில் பார்முலா-1 கார் பந்தயம் இன்று நடைபெறுகிறது. முன்னதாக இதற்கான தகுதிச்சுற்று போட்டி நேற்று நடைபெற்றது. இதில் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்களின் கார்கள் சீறிப்பாய்ந்தன.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த பந்தயத்தில் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ரெட் புல் அணியின் ஓட்டுநர் வெர்ஸ்டாப்பென் முதலிடம் பிடித்து அசத்தினார். ஆஸ்திரேலிய வீரர் ஆஸ்கார் பியாஸ்ட்ரி 2-வது இடமும், இங்கிலாந்து வீரர் லாண்டோ நாரிஸ் 3-வது இடமும் பிடித்தனர்.

கடந்த தொடர்களில் ஆதிக்கம் செலுத்திய முன்னணி வீரர் வெஸ்ர்டாப்பென், தற்போது ஜப்பானில் நடைபெறும் பார்முலா-1 பந்தயத்திலும் வெற்றியை தன்வசப்படுத்துவார் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

மேலும் செய்திகள்