< Back
பிற விளையாட்டு
முதல்-அமைச்சர் கோப்பை கைப்பந்து போட்டியில் முதலிடம் பிடித்த அணிக்கு பரிசு
பிற விளையாட்டு

முதல்-அமைச்சர் கோப்பை கைப்பந்து போட்டியில் முதலிடம் பிடித்த அணிக்கு பரிசு

தினத்தந்தி
|
5 July 2023 5:23 AM IST

முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் முதலிடம் பிடித்த அணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசு வழங்கினார்

சென்னை,

முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் சென்னையில் பல்வேறு இடங்களில் நடந்து வருகின்றன. இதில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த பள்ளி மாணவிகளுக்கான கைப்பந்து போட்டியில் முதல் 3 இடங்களை சேலம், சென்னை, ஈரோடு அணிகள் பிடித்தன.

அந்த அணிகளுக்கான மொத்தம் ரூ.13.50 லட்சம் பரிசுத்தொகை, பதக்கங்கள் மற்றும் பரிசுக்கோப்பைகளை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வழங்கி பாராட்டினார். முதலிடம் பிடித்த சேலம் அணியினருடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, எஸ்.டி.ஏ.டி. உறுப்பினர் செயலர் மேகநாதரெட்டி ஆகியோர் உள்ளனர்.

மேலும் செய்திகள்