< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு

சென்னையில் கார் பந்தயத்துக்கு இடையூறு - நாய்களை பிடித்து அப்புறப்படுத்திய ஊழியர்கள்

தினத்தந்தி
|
1 Sept 2024 11:02 AM IST

கார் பந்தயம் நடைபெறும் சாலையின் சுற்றுப்புற பகுதிகளில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை,

தெற்காசியாவிலேயே முதல்முறையாக சென்னையில் இரவு நேரத்தில் சாலையில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படுகிறது. நேற்று போட்டியின் பயிற்சி சுற்று நடைபெற்றது. அப்போது பந்தய சாலையில் திடீரென நாய் ஒன்று உள்ளே புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் பந்தய சாலையில் இருந்து அந்த நாயை அப்புறப்படுத்தினர்.

இந்த சூழலில், இன்றைய தினம் கார் பந்தயத்தின் முக்கிய சுற்றான தகுதி சுற்று மற்றும் அடுத்தடுத்த சுற்றுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில் கார் பந்தயத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில், பந்தயம் நடைபெறக் கூடிய சாலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்