< Back
பிற விளையாட்டு
மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி
ஈரோடு
பிற விளையாட்டு

மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி

தினத்தந்தி
|
9 Aug 2022 2:56 AM IST

மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது.

ஈரோடு மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி பெருந்துறையில் நடைபெற்றது. இந்த சிலம்பம் போட்டியில் 14 வயது முதல் 35 வயது வரையிலான வீரர்கள் கலந்துகொண்டனர். மினி சப் ஜூனியர், சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் தரவரிசையில் போட்டிகள் நடைபெற்றது. குத்து வரிசை, கம்பு வீச்சு, அலங்கார வீச்சு, வேல் கம்பு, கம்பு சண்டை உள்பட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்