< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்
|5 Oct 2023 12:59 PM IST
ஆசிய விளையாட்டு தொடரின் ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் மலேசிய அணியை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது.
ஹாங்சோவ்,
ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் மலேசிய அணியை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றுள்ளது. இந்தியாவின் தீபிகா பல்லிக்கல்/ ஹரிந்தர் பால் சிங் ஜோடி, மலேசியாவின் அய்ஃபா பிண்டி அஸ்மான்/ முகம்மது சியாஃபிக் பின் முகம்மது கமல் ஜோடியை 8-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை உறுதி செய்தது. ஆசிய விளையாட்டு தொடரில் இந்தியா பெறும் 20-வது தங்கம் இதுவாகும்.