< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: கிடாம்பி ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
|18 Oct 2022 11:39 PM IST
ஹாங்காங்கின் என்ஜி கா லாங் அங்கஸை வீழ்த்தி ஸ்ரீகாந்த் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
கோபன்ஹேகன்,
டென்மார்க் ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் இன்று தொடங்கி 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் முன்னணி டென்னிஸ் நட்சத்திரம் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஹாங்காங்கின் என்ஜி கா லாங் அங்கஸை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
56 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் ஸ்ரீகாந்த் 17-21, 21-14, 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி உள்ளார். அதே போல் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் த்ரீசா மற்றும் காயத்ரி கோபிசந்த் இணை 21-15, 21-15 என்ற நேர் செட் கணக்கில் போஜே/மகெலுண்ட் ஜோடியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.