< Back
பிற விளையாட்டு
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: இந்திய இளம்வீரர் லக்சயா சென் காலிறுதியில் தோல்வி..!
பிற விளையாட்டு

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: இந்திய இளம்வீரர் லக்சயா சென் காலிறுதியில் தோல்வி..!

தினத்தந்தி
|
22 Oct 2022 8:28 AM IST

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதியில் இந்திய இளம்வீரர் லக்சயா சென் தோல்வியடைந்தார்.

டென்மார்க்,

டென்மார்க் ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் இளம் வீரர் லக்சயா சென், மற்றொரு இந்திய வீரரான எச்.எஸ் பிரனாயுடன் மோதினார்.

இந்த போட்டியில் லக்சயா சென், 21-9, 21-18 என்ற செட் கணக்கில் பிரனாயை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் லக்சயா சென் ஜப்பான் வீரர் கோடை நரோகாவுடன் மோதினார்.

இந்த போட்டியில் லக்சயா சென் 17-21, 12-21 என்ற செட் கணக்கில் நரோகாவிடம் தோல்வியைத் தழுவினார்.

மேலும் செய்திகள்