< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
டேவிஸ் கோப்பை டென்னிஸ்: டென்மார்க் அணிக்கு எதிராக மோதும் இந்திய அணி அறிவிப்பு
|25 Dec 2022 4:39 AM IST
இந்தியா-டென்மார்க் இடையிலான ஆட்டம் பிப்ரவரி 3, 4-ந்தேதிகளில் டென்மார்க்கில் உள்ள ஹிலர்ராட் நகரில்நடக்கிறது.
ஹிலர்ராட்,
டேவிஸ் கோப்பை டென்னிசில் உலக குரூப் பிளே-ஆப் சுற்றில் இந்தியா-டென்மார்க் இடையிலான ஆட்டம் பிப்ரவரி 3, 4-ந்தேதிகளில் டென்மார்க்கில் உள்ள ஹிலர்ராட் நகரில் நடக்கிறது.
இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சசிகுமார் முகுந்த், பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ராம்குமார், ரோகன் போபண்ணா, யுகி பாம்ப்ரி ஆகியோர் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளனர்.
மாற்று வீரராக சுமித் நாகல் இருப்பார். விளையாடாத கேப்டனாக ரோஹித் ராஜ்பால் பணியாற்றுவார்.