உலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்து வீச முடிவு
|உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடக்கும் 3 - வது ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
தர்மசாலா,
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன்படி தர்மசாலாவில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கும் 3-வது லீக்கில் ஆப்கானிஸ்தான்-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.
இமாசலபிரதேச மாநிலத்தில் உள்ள மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கேட் நடப்பது இதுவே முதல் முறையாகும். பொதுவாக இங்குள்ள ஆடுகளத்தில் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சு நன்கு எடுபடும். ஆனால் ஐ.பி.எல்.-ல் நடந்த இரு ஆட்டங்களில் ரன்மழை பொழியப்பட்டதால் அத்தகைய ஆடுகளத் தன்மையையே இருஅணியினரும் எதிர்பார்க்கிறார்கள்.
இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற வங்காள தேச அணியின் கேப்டன் சாஹிப் அல் ஹசன் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.
இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன் :
ஆப்கானிஸ்தான் (பிளேயிங் லெவன்): ரஹ்மானுல்லா குர்பாஸ்(w), இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி(c), முகமது நபி, நஜிபுல்லா ஜத்ரான், அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக், ஃபுருக்ஹல்ஹாக்.
பங்களாதேஷ் (பிளேயிங் லெவன்): தன்சித் ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, மெஹிதி ஹசன் மிராஸ், ஷாகிப் அல் ஹசன்(c), முஷ்பிகுர் ரஹீம்(w), தவ்ஹித் ஹிரிடோய், மஹ்முதுல்லா, தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான்
இந்த ஆட்டத்தை தொடர்ந்து டெல்லியில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் 4-வது லீக்கில் இலங்கை-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.