< Back
பிற விளையாட்டு
காமன்வெல்த் போட்டி: கானாவுக்கு எதிரான ஆக்கி போட்டியில் இந்திய ஆடவர் அணி அபார வெற்றி...!

கோப்புப்படம்

பிற விளையாட்டு

காமன்வெல்த் போட்டி: கானாவுக்கு எதிரான ஆக்கி போட்டியில் இந்திய ஆடவர் அணி அபார வெற்றி...!

தினத்தந்தி
|
31 July 2022 11:21 PM IST

கானாவுக்கு எதிரான ஆக்கி போட்டியில் 11-0 என்ற கோல் கணக்கில் இந்திய ஆடவர் அணி அபார வெற்றி பெற்றது.

பர்மிங்ஹாம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் ஆண்களுக்கான ஆக்கியில் இந்திய அணி தனது முதல் போட்டியில் கானாவை சந்தித்தது. ஆட்டத்திம் முதல் நிமிடத்திலேயே அபிஷேக் கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார்.

ஆட்டத்தின் முதல் காலிறுதியில் இந்திய அணி மேலும் 3 கோல்கள் அடித்தது. அந்த கோல்களை துணை கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், ஷம்ஷேர் சிங், ஆகாஷ்தீப் சிங் ஆகியோர் அடித்தனர். இரண்டாவது காலிறுதி முடிவதற்கு சற்று நேரத்துக்கு முன் பெனால்டி ஸ்டிரைக்கை பயன்படுத்தி ஜூக்ராஜ் ஐந்தாவது கோலை அடித்தார்.

ஆட்டத்தின் மூன்றாவது காலிறுதியில் ஹர்மன்பிரீத், நீலகண்ட் சர்மா, வருண் குமார்,ஜூக்ராஜ் தலா ஒரு கோல் அடிக்க இந்திய அணி 9-0 என்ற கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது. ஆட்டத்தில் கடைசி காலிறுதியில் மந்தீப் சிங் 10-வ்து கோல் அடிக்க, கடையில் ஹர்மன்பிரீத் சிங் மேலும் ஒரு கோல் அடித்தார். இறுதியில் இந்திய அணி 11-0 என்ற கணக்கில் கானாவை அபாரமாக வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்திய அணி தரப்பில் மொத்தம் எட்டு வீரர்கள் கோல் அடித்தனர். இந்தியா சார்பில் அபிஷேக், ஹர்மன்பிரீத், ஷம்ஷேர் சிங், ஆகாஷ்தீப் சிங், ஜுக்ராஜ் சிங், நீலகண்ட் சர்மா, வருண் குமார், மன்தீப் சிங் ஆகியோர் கோல் அடித்தனர். மறுபுறம், துணை கேப்டன் ஹர்மன்பிரீத் ஹாட்ரிக் கோல் அடித்தார். இந்திய அணி தனது அடுத்த ஆட்டதில் ஆகஸ்ட் 1-ந் தேதி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

மேலும் செய்திகள்