< Back
பிற விளையாட்டு
காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்ற தீபிகா, சவுரவ் கோஷலுக்கு உற்சாக வரவேற்பு
பிற விளையாட்டு

காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்ற தீபிகா, சவுரவ் கோஷலுக்கு உற்சாக வரவேற்பு

தினத்தந்தி
|
16 Aug 2022 1:47 AM IST

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வெண்கலம் வென்ற தீபிகா, சவுரவ் கோஷலுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை,

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் சமீபத்தில் நடந்தது. இதில் ஸ்குவாஷ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த சவுரவ் கோஷல்-தீபிகா ஜோடி வெண்கலப்பதக்கம் வென்றது.

பதக்கம் வென்ற சவுரவ் கோஷல், தீபிகா ஆகியோர் நேற்று சென்னை திரும்பினர். அவர்களை விமான நிலையத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர்.

பின்னர் தீபிகா நிருபர்களிடம் கூறுகையில், 'காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்து வரும் போட்டிகளுக்கு என்னை தயார்படுத்த திட்டமிட்டு பயிற்சிகளை மேற்கொள்வேன்' என்றார்.

மேலும் செய்திகள்