< Back
பிற விளையாட்டு
காமன்வெல்த்: பெண்களுக்கான ஜூடோ போட்டியில் துலிகா மான் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தல்...!
பிற விளையாட்டு

காமன்வெல்த்: பெண்களுக்கான ஜூடோ போட்டியில் துலிகா மான் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தல்...!

தினத்தந்தி
|
4 Aug 2022 12:25 AM IST

காமன்வெல்த்தின் பெண்களுக்கான ஜூடோ போட்டியில் இந்தியாவின் துலிகா மான் வெள்ளிப் பதக்கம் வென்றார்

பர்மிங்ஹாம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் என 15 பதக்கங்களை கைப்பற்றி இருந்தது.

இந்நிலையில் பெண்களுக்கான ( 78கிலோ ) ஜூடோ போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் துலிகா மான் ஸ்காட்லாந்தின் சாரா அட்லிங்டனை சந்தித்தார். துலிகா மான் காலிறுதி போட்டியில் மொரீஷியஸின் ட்ரேசி டர்ஹோனை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

தொடர்ந்து நடைபெற்ற அரையிறுதி போட்டியில் துலிகா மான் நியூசிலாந்தின் சிட்னி ஆண்ட்ரூஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதி ஆட்டத்தில் ஸ்காட்லாந்தின் சாரா அட்லிங்டனை சந்தித்தார். இந்த போட்டியில் துலிகா மான் சாரா அட்லிங்டனிடம் தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.

இந்த பதக்கத்தையும் சேர்த்து இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 16- ஆக அதிகரித்துள்ளது. இந்தியா இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என 16 பதக்கங்களுடன் 7-வது இடத்தில் இருக்கிறது.

மேலும் செய்திகள்