< Back
பிற விளையாட்டு
சீன மாஸ்டர்ஸ்; பிரன்னாய், சாத்விக்சாய்ராஜ்-சிராக் காலிறுதிக்கு முன்னேற்றம்
பிற விளையாட்டு

சீன மாஸ்டர்ஸ்; பிரன்னாய், சாத்விக்சாய்ராஜ்-சிராக் காலிறுதிக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
23 Nov 2023 7:05 PM IST

உலக தர வரிசையில் 8-வது இடத்தில் உள்ள பிரன்னாய் அடுத்து, ஜப்பானின் கோடாய் நராவ்காவை எதிர்த்து விளையாடுவார்.

ஷென்ஜென்,

சீனாவின் ஷென்ஜென் நகரில் சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இன்று நடந்த ஒற்றையர் பிரிவு போட்டி ஒன்றில், இந்தியாவின் முன்னணி வீரரான எச்.எஸ். பிரன்னாய் மற்றும் ஆடவர் இரட்டையர் பிரிவை சேர்ந்த சாத்விக்சாய்ராஜ் மற்றும் சிராக் இணை வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறி உள்ளன.

காலிறுதிக்கு முந்தின சுற்றில், டென்மார்க்கை சேர்ந்த மேக்னஸ் ஜோகன்சென்னுக்கு எதிராக விளையாடிய பிரன்னாய், 21-12, 21-18 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார். இந்த போட்டி 40 நிமிடங்கள் நீடித்தது.

உலக தர வரிசையில் 8-வது இடத்தில் உள்ள பிரன்னாய் (வயது 31) அடுத்து, ஜப்பானின் கோடாய் நராவ்காவை எதிர்த்து விளையாடுவார். இதில் வெற்றி பெற்றால், அரையிறுதிக்கு தகுதி பெறுவார்.

இதேபோன்று, சாத்விக்சாய்ராஜ் மற்றும் சிராக் இணை, ஜப்பானின் அகிரா கோகா மற்றும் தைசி சைதோ இணையை எதிர்த்து விளையாடியது.

46 நிமிடங்கள் வரை நீடித்த இந்த போட்டியில், 21-15, 21-16 என்ற புள்ளி கணக்கில் இந்திய இணை வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

மேலும் செய்திகள்