< Back
பிற விளையாட்டு
சீன ஓபன் : இந்திய வீராங்கனை மாள்விகா பன்சோத் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
பிற விளையாட்டு

சீன ஓபன் : இந்திய வீராங்கனை மாள்விகா பன்சோத் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
19 Sept 2024 10:09 AM IST

இந்தியாவின் மாள்விகா பன்சோத், இந்தோனேசிய வீராங்கனை துங்ஜங்கை எதிர்கொண்டார்.

பீஜிங்,

சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டிகள் நடந்து வருகின்றன.இதில் ,முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் மாள்விகா பன்சோத், இந்தோனேசிய வீராங்கனை துங்ஜங்கை எதிர்கொண்டார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய மாள்விகா பன்சோத் 26-24, 21-19 என்ற கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.இன்று நடைபெறும் 2வது சுற்றில் பன்சோத், ஸ்காட்லாந்து வீராங்கனை கில்மோருடன் மோத உள்ளார்.

மேலும் செய்திகள்