< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
சீன ஓபன் பேட்மிண்டன்; காலிறுதியில் தோல்வி கண்ட மாள்விகா பன்சோத்
|20 Sept 2024 11:10 AM IST
இந்தியாவின் மாள்விகா பன்சோத், ஜப்பானின் அகானே யமகுசி உடன் மோதினார்.
பீஜிங்,
சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் மாள்விகா பன்சோத், ஜப்பானின் அகானே யமகுசி உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அகானே யமகுசி 21-10, 21-16 என்ற நேர் செட் கணக்கில் மாள்விகா பன்சோத்தை வீழ்த்தினார். இந்த தோல்வியின் காரணமாக மாள்விகா பன்சோத் தொடரில் இருந்து வெளியேறினார்.