< Back
பிற விளையாட்டு
சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்; பிரனாய் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்!

image courtesy; AFP

பிற விளையாட்டு

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்; பிரனாய் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்!

தினத்தந்தி
|
22 Nov 2023 12:31 PM IST

இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்-சிராக் இணை 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ஷென்சென்,

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் அங்குள்ள ஷென்சென் நகரில் நேற்று தொடங்கியது. இதில் இந்திய வீரர்களான எச்.எஸ்.பிரனாய், லக்சயா சென், கிடாம்பி ஸ்ரீ காந்த், சாத்விக்சாய்ராஜ் மற்றும் சிராக் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இதில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 21-18 22-20 என்ற நேர் செட்டில் சீன தைபேவை சேர்ந்த சோவ் டைன் சென்னை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

இரட்டையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்-சிராக் இணை 21-13 மற்றும் 21-10 என்ற நேர் செட்டில் இங்கிலாந்தின் பென் லேன் - சீன் வெண்டி இணையை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற ஒரே வீராங்கனையான ஆகர்ஷி காஷ்யப் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறினார்.

மேலும் செய்திகள்