செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டி தொடங்கியது.. வரலாறு படைப்பாரா பிரக்ஞானந்தா? மாக்னஸ் கார்ல்செனுடன் மோதல்
|கார்ல்சன் - பிரக்ஞானந்தா மோதும் இறுதிப் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.
பாகு,
10-வது உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் நடந்து வருகிறது. இதில் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலகின் 3-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பேபியானா காருவானாவை சந்தித்தார். அரைஇறுதி சுற்று இரு ஆட்டங்கள் கொண்டது. இரு ஆட்டமும் டிராவில் முடிந்ததால் வெற்றியாளரை தீர்மானிக்க ஆட்டம் டைபிரேக்கருக்கு சென்றது.
அதிவேகமாக காய்களை நகர்த்தும் டைபிரேக்கரில் இருவரும் 4 ஆட்டங்களில் மோத வேண்டும். இதன்படி முதல் 2 ஆட்டம் டிரா ஆனது. 3-வது ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் சாதுர்யமாக செயல்பட்ட பிரக்ஞானந்தா 63-வது காய் நகர்த்தலில் எதிராளியை அடக்கி அசத்தினார். எஞ்சிய ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது. முடிவில் பிரக்ஞானந்தா 3½-2½ என்ற புள்ளி கணக்கில் பேபியானாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
இந்நிலையில் நார்வே நாட்டைச் சேர்ந்த மாக்னஸ் கார்ல்சென் – பிரக்ஞானந்தா மோதும் இறுதிப் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.இறுதிச் சுற்று இரு ஆட்டங்களை கொண்டதாகும்; போட்டி சமன் ஆனால் டை பிரேக்கருக்கு நகரும்.இறுதிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா வரலாறு படைப்பாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.