< Back
பிற விளையாட்டு
செஸ் ஒலிம்பியாட் : உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் சென்னை வருகை

Image Courtesy :Chennai (MAA) Airport Twitter 

பிற விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட் : உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் சென்னை வருகை

தினத்தந்தி
|
29 July 2022 9:12 AM IST

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க நார்வே நாட்டை சேர்ந்த உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் இன்று சென்னை வந்தார்

சென்னை,

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம், பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாய்ண்ட்ஸ் ரிசார்ட் என்ற 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இன்று முதல் அடுத்த மாதம் 10-ந் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடரின் முதல் சுற்று போட்டிகள் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க நார்வே நாட்டை சேர்ந்த உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் இன்று சென்னை வந்தார்.அவர் நார்வே அணிக்காக போர்டு நம்பர் 1 இல் விளையாடுவார்.

மேலும் செய்திகள்