< Back
பிற விளையாட்டு
செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஏற்றப்பட்டது....!
பிற விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஏற்றப்பட்டது....!

தினத்தந்தி
|
28 July 2022 8:15 PM IST

நாட்டின் 75 நகரங்கள் சுற்றி வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஏற்றப்பட்டது

சென்னை,

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம், பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாய்ண்ட்ஸ் ரிசார்ட் என்ற 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இன்று முதல் அடுத்த மாதம் 10-ந் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. பிரதமர் மோடி விழாவில் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.. இந்த நிலையில் முன்னதாக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் கொடி அணிவகுப்பு நடந்தது.மாவட்ட அளவில் நடைபெற்ற செஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் 186 பேர் இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர்.அவர்கள் பன்னாட்டு வீரர்களை வழிநடத்தி சென்றனர். அடுத்து செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பின்னர் நாட்டின் 75 நகரங்கள் சுற்றி வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதியை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்தார் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்.தொடர்ந்து முக ஸ்டாலின் ஒலிம்பியாட் ஜோதியை பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தார்.பின்னர் ஒலிம்பியாட் ஜோதி இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவிடம் ஒப்படைக்கப்பட்டது .தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஏற்றப்பட்டது.


மேலும் செய்திகள்