செஸ் ஒலிம்பியாட்: தமிழ்நாடு வீராங்கனை வைஷாலி வெற்றி
|செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை வைஷாலி வெற்றிபெற்றுள்ளார்.
சென்னை,
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி விளையாடிய அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற 2-வது சுற்று போட்டிகளிலும் இந்திய அணி பெற்று வெற்றி பெற்றது.
இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 3-ம் சுற்று ஆட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா சார்பில் இன்றைய போட்டியில் 6 அணிகள் களமிறங்கி உள்ளன. அதில் ஆண்கள் பிரிவில் 3 அணிகளும், பெண்கள் பிரிவில் 3 அணிகளும் பங்கேற்றுள்ளன.
இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மகளிர் இந்திய ஏ அணியில் விளையாடிய தமிழ்நாடு வீராங்கனை வைஷாலி இங்கிலாந்து அணியின் தோமாவை வீழ்த்தினார். வெள்ளைநிற காய்களுடன் விளையாடிய வைஷாலி தனது 65வது நகர்த்தலில் தோமாவை அவர் வீழ்த்தினார்.
* முன்னதாக தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா, ஸ்விட்சர்லாந்து வீரர் பெல்லடியர் யானிக்குடன் மோதினார். அவர் 67 ஆவது நகர்த்தலில் யானிக்கை வீழ்த்தி வெற்றிபெற்றார்.
* செஸ் ஒலிம்பியாட் 3வது சுற்றில் இந்திய மகளிர் சி பிரிவில் விளையாடிய தமிழக வீராங்கனை நந்திதா வெற்றி பெற்றார். றுள்ளார். ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த எதிரணி வீராங்கனை பங்கேற்காததால் நந்திதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஏற்கனவே நடந்து முடிந்த 2 சுற்றுகளிலும் நந்திதா வெற்றி பெற்று இருந்தார்.
* 3 வது சுற்றின் மற்றொரு போட்டியில் இந்திய வீரர் ரவுனக் சத்வானி வெற்றி பெற்றுள்ளார். சுவிட்சர்லாந்தின் பேபியனை வீழ்த்தி ரவுனக் சத்வானி வெற்றி பெற்றார்.
* இந்தியாவின் சார்பாக மகளிர் சி பிரிவில் விளையாடிய ஈஷாவின் போட்டி டிராவில் முடிந்தது. தொடர்ந்து, இந்தியாவின் பொதுப்பிரிவு ஏ அணியில் விளையாடிய ஹரி கிருஷ்ணா வெற்றிப் பெற்றார்.
* இந்திய பொதுப்பிரிவு சி அணியில் விளையாடிய அபிஜித் குப்தாவும் வெற்றிப் பெற்றார். ஐஸ்லாந்து அணி வீரரை எதிர்கொண்டு விளையாடியபோது 36வது நகர்த்தலில் அபிஜித் குப்தா வெற்றி பெற்றார்.