< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
செஸ் ஒலிம்பியாட் - 5வது சுற்று : உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் வெற்றி..!
|2 Aug 2022 5:55 PM IST
26வது நகர்த்தலில் மாக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றார்
சென்னை,
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் இன்று நடைபெற்ற 5வது சுற்று ஆட்டத்தில் நார்வே நாட்டை சேர்ந்த உலக செஸ் சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் - ஜாம்பியா வீரர் கிலன் ஆகியோர் மோதினர்.
இந்த போட்டியில் 26வது நகர்த்தலில் ஜாம்பியா வீரரை வீழ்த்தி மாக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றார்.