< Back
பிற விளையாட்டு
செஸ் ஒலிம்பியாட்: இந்தியா- அமெரிக்கா பெண்கள் ஆட்டம் டிரா
பிற விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட்: இந்தியா- அமெரிக்கா பெண்கள் ஆட்டம் 'டிரா'

தினத்தந்தி
|
21 Sept 2024 4:00 AM IST

இந்திய ஆண்கள் அணி 9-வது சுற்றில் உஸ்பெகிஸ்தானுடன் மோதியது.

புடாபெஸ்ட்,

45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் பெண்கள் பிரிவில் நேற்று முன்தினம் நடந்த 8-வது சுற்றில் இந்திய அணி 1½- 2½ என்ற புள்ளி கணக்கில் போலந்திடம் தோற்றது. நடப்பு தொடரில் இந்திய பெண்கள் அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். தொடர்ந்து பெண்கள் அணி 9-வது சுற்றில் நேற்று அமெரிக்காவுடன் மல்லுக்கட்டியது. இதில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக், தானியா சச்தேவ் தங்களது ஆட்டங்களை டிரா செய்தனர். தமிழகத்தின் வைஷாலி 34-வது காய் நகர்த்தலில் அமெரிக்காவின் டோகிர்ஜோனோவாவிடம் பணிந்தார். கடும் நெருக்கடிக்கு மத்தியில் கருப்புநிற காய்களுடன் ஆடிய மற்றொரு இந்திய மங்கை வந்திகா அகர்வால் 35-வது காய் நகர்த்தலில் அமெரிக்காவின் இரினா குருஷை வீழ்த்தி அணியை காப்பாற்றினார். முடிவில் இந்த ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

ஓபன் பிரிவில் இந்திய ஆண்கள் அணி 9-வது சுற்றில் உஸ்பெகிஸ்தானுடன் மோதியது. இதில் குகேஷ், பிரக்ஞானந்தா, விதித் குஜராத்தி ஆகியோரது ஆட்டம் டிரா ஆனது. அர்ஜூன் எரிகாசி (இந்தியா)- ஷம்சித்தின் வோகிடோவ் (உஸ்பெகிஸ்தான்) இடையிலான ஆட்டம் 4½ மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது.

மேலும் செய்திகள்