< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
செஸ் ஒலிம்பியாட்; தங்கம் வென்ற இந்திய அணிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
|23 Sept 2024 12:41 PM IST
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணிக்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணிக்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட் நிகழ்வில் பொது மற்றும் மகளிர் என இரு பிரிவிலும் தங்கம் வென்றுள்ள இந்திய அணியினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
செஸ் உலகின் தலைசிறந்த போட்டியில், மிகுந்த அர்ப்பணிப்புடன் விளையாடி, நாட்டிற்கு நம் அணியினர் பெரும் புகழைச் சேர்த்துள்ளது மெச்சத்தக்கது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.