< Back
பிற விளையாட்டு
சென்னை பல்கலைக்கழக தடகளம்: பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் லயோலா கல்லூரி வீராங்கனை தங்கம் வென்றார்
பிற விளையாட்டு

சென்னை பல்கலைக்கழக தடகளம்: பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் லயோலா கல்லூரி வீராங்கனை தங்கம் வென்றார்

தினத்தந்தி
|
22 Dec 2022 2:57 AM IST

பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் லயோலா வீராங்கனை ஷெரின் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

சென்னை,

சென்னை பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கான 54-வது ஏ.எல். முதலியார் பொன்விழா நினைவு தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

இதில் 2-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் லயோலா வீராங்கனை ஷெரினும் (11.93 வினாடி), 400 மீட்டர் ஓட்டத்தில் எஸ்.டி.என்.பி.வைஷ்ணவா வீராங்கனை தனுஷ்காவும் (57.41 வினாடி), ஈட்டி எறிதலில் எஸ்.டி. என்.பி. வைஷ்ணவா வீராங்கனை ஹேமமாலினியும், குண்டு எறிதலில் பச்சையப்பா வீராங்கனை வைஷ்ணவியும் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றனர்.

இன்று கடைசி நாள் பந்தயங்கள் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு நடைபெறும் பரிசளிப்பு விழாவில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.கவுரி கலந்து கொண்டு வெற்றி பெற்ற கல்லூரிகளுக்கு பரிசுக் கோப்பையை வழங்குகிறார்.

மேலும் செய்திகள்