< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
8 அணிகள் பங்கேற்கும் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி - சென்னையில் நடக்கிறது
|30 May 2024 2:33 AM IST
அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி சென்னையில் ஆகஸ்ட் 22-ந் தேதி முதல் செப்டம்பர் 7-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
சென்னை,
5-வது அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் ஆகஸ்ட் 22-ந் தேதி முதல் செப்டம்பர் 7-ந் தேதி வரை நடைபெறும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது. இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனம் ஆதரவுடன் நீரஜ் பஜாஜ், விட்டா டானி ஆகியோரால் நடத்தப்படும் இந்த போட்டியில் புதிதாக ஆமதாபாத் எஸ்.ஜி.பைபர்ஸ், ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் ஆகிய அணிகள் இணைகின்றன.
இதன் மூலம் இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. இந்த அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்படும். ஒவ்வொரு அணியும், தங்களது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறையும், எதிர் பிரிவில் உள்ள குறிப்பிட்ட 2 அணிகளுடன் தலா ஒருமுறையும் மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.